வெறுப்பு பேச்சுக்கு கிடைத்த வெகுமதி??பாஜக எம்பி ரமேஷ் பிதுரிக்கான புதிய பொறுப்பு
நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை மிக மோசமான கருத்துகளைக் கூறிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரிக்கு புது பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவதூறு கருத்து
பாஜகவின் தெற்கு டெல்லி தொகுதியின் எம்.பி ரமேஷ் பிதுரி. நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் விவாதத்தின் போது, மற்றொரு எம்.பியான பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த டேனிஷ் அலியை பார்த்து ரமேஷ் பிதுரி கூறிய கருத்துக்கள் கடும் சர்ச்சைகளை கிளப்பின.
'இஸ்லாமிய வெறுப்பு பேச்சு' என ரமேஷ் பிதுரியின் கருத்துக்களை பல எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
வெகுமதியா..?
இந்த கருத்துக்களின் போதே பல எதிர்க்கட்சி தலைவர்கள், பாஜகவுக்கு இது ஒன்றும் புதிது இல்லை என்று குறிப்பிட்டு, வெறுப்புவாத கருத்துகளையே பாஜக பரப்பி வருவதாகவும் சாடினர்.
இந்த சர்ச்சைகள் இன்னும் அடங்கிறதா நிலையில், தற்போது செய்தி ஒன்று வெளியாகி பெரும் விமர்சனங்களை பெற்று வருகின்றது. ராஜஸ்தானின் டோங் என்ற பகுதியின் பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவராக ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டுள்ளார்.