இதெல்லாம் இந்தியை திணிக்கிற வேலை : அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த ராமதாஸ்

hindi ramdas amitsha
By Irumporai Sep 14, 2021 10:35 AM GMT
Report

 இந்தியர்கள் அனைவரும் தாய்மொழியுடன் இந்தியையும் பயன்படுத்த வேண்டும் என்று இந்தி மொழி தின நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்து இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் செயல் என்று பாஜகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் :

இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

இது மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயலாகும் இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்று கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடக்கின்றன.

அது தவறுஅவ்வாறு கூறக்கூடாது எனக் கூறியுள்ள ராமதாஸ்,தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது. 

இந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச்சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.