சவுதி அரேபியா,துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் சனிக்கிழமை முதல் ரமலான் நோன்பு துவக்கம்..!

Countries Ramadan Start Gulf Ramadan2022
By Thahir Apr 01, 2022 06:45 PM GMT
Report

சவுதி அரேபியா,பஹ்ரைன்,குவைத்,துபாய்,கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் சனிக்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் முக்கிய மாதங்களில் ஒன்று ரமலான் மாதம்,அந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல் தண்ணீர் பருகாமல் 30 நாட்கள் நோன்பு பிடித்து வருவார்கள்.

இந்நிலையில் அரபு நாடுகளில் ரமலான் மாத பிறை தென்பட்டதால் சனிக்கிழமை முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.