விஜய் சேதுபதிக்காக கதை தயார் செய்து வரும் ராமராஜன்

vijay movie sethupathi ramarajan story
By Jon Mar 30, 2021 02:48 AM GMT
Report

விஜய் சேதுபதிக்கு தான் ஒரு கதை தயார் செய்து வருவதாக ராமராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜொலித்தவர் ராமராஜன். தற்போது பல வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் படம் இயக்க உள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் கதாநாயகனாக 44 படங்களில் நடித்து இருக்கிறேன்.

5 படங்களை இயக்கி உள்ளேன். இந்த 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருந்தன. நான் இயக்க இருக்கும் புதிய படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருக்கும். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன்.

அதுபோல் நான் கடைசி வரை ஜெயலலிதாவின் தொண்டனாகவே இருப்பேன். தற்போது நான் தயார் செய்து கொண்டிருக்கும் கதை விஜய்சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளன”. இவ்வாறு ராமராஜன் தெரிவித்துள்ளார்.