ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நிதியுதவி
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான நிதி வசூலிப்பை தொடங்கியுள்ளது அதற்காக உருவாக்கப்பட்டுள்ள ட்ரஸ்ட் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் இராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாகும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு இராமர் கோயிலை கட்டி முடிப்பதற்கு மூன்றரை ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி வசூலிப்பை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தொடங்கியுள்ளது. அதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் இராமர் கோயில் ட்ரஸ்ட் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அதற்காக ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.