ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடி நிதியளித்த கவுதம் காம்பீர்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு பா.ஜ.,எம்.பி.,கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கு நிதி திரட்டுவது தொடர்பாக பிரசாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு துவக்கியுள்ளது. தற்போது நிதி திரட்டுவதற்கான பணிகளில் மும்முரமாக உள்ளது.

இந்த நிலையில் பாஜ.,எம்.பி., கவுதம் காம்பீர், ராமர் கோவில் கட்ட தனது பங்களிப்பாக ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காம்பீர் ,ராமர் கோவில் கட்டப்படுவது அனைத்து இந்தியர்களின் நீண்டகால கனவு.
இதனால் மக்களின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழி ஏற்படுத்துள்ளது.
ஆகாவே நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக சிறிய தொகை பங்களிப்பாக வழங்கியுள்ளதாக கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.