உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார் என்.வி.ரமனா
இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வருகிற ஏப்ரல் 23-ம் தேதி உடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி என்.வி.ரமனாவை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். நடைமுறைப்படி மூத்த நீதிபதியாக உள்ளவரே தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.
அந்த வரிசையில் என்.வி.ரமனாவை தலைமை நீதிபதியாக நியமிக்க போப்டே பரிந்துரைத்திருந்தார். என்.வி.ரமனா 16 மாதங்கள் தலைமை நீதிபதியாக இருப்பார். உச்சநீதிமன்றத்தில் பல்வேறு முக்கியமான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் என்.வி.ரமனா மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்கு ஆந்திர அரசியலில் என்.வி.ரமனா ஆதிக்கம் செலுத்துகிறார் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த குற்றச்சாட்டில் எந்த விதமான முகாந்திரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.