ராமஜெயம் கொலை வழக்கு!... முதல்கட்ட விசாரணையின் நிலை என்ன?

Tamil nadu Chennai Tamil Nadu Police K. N. Nehru Tiruchirappalli
By Thahir Jan 18, 2023 07:07 AM GMT
Report

ராமஜெயம் கொலை வழக்கில் முதல்கட்ட விசாரணையில் 4பேரிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

ராமஜெயம் கொலை வழக்கு 

திருச்சியை சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் , அமைச்சர் கே.என்.நேருவின் சகோதர் ராமஜெயம் என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை 10ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார்கள் விசாரித்து வந்தனர். ஆனால், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்மை கண்டறியும் சோதனை 

இந்த கொலை சம்பவம் நடந்தபோது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன் உள்பட 13பேர் இருந்தனர். இந்த பட்டியலில் உள்ளவர்களிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அனுமதித்தார்.

ramajayam-murder-case-investigation

இந்நிலையில், 13பேரிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், இன்று முதல்கட்டமாக வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகிய 4 பேரிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது, உண்மை கண்டறியும் பரிசோதனையின் முடிவில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும். பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும், என கூறினார்கள்.