ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராமஜெயம் கொலை வழக்கு ஒத்திவைப்பு
13 ரவுடிகளை பாலிகிராம் சோதனை செய்ய அனுமதி கோரிய வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜரானார்கள்.
பாலிகிராம் சோதனையில் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என ரவுடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக 20 பேரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, அடுத்ததாக, மீண்டும் 11 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
இதற்காக சம்பந்தப்பட்ட 11 பேர் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்காக சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், பாலிகிராம் சோதனையில் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என ரவுடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.