ராமஜெயம் கொலை வழக்கு; 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

Tamil nadu K. N. Nehru Tiruchirappalli
By Thahir Nov 01, 2022 06:59 AM GMT
Report

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

ராமஜெயம் படுகொலை வழக்கு

கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை திருச்சி தில்லை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி திருச்சி - கல்லணை ரோட்டில் பொன்னிடெல்டா பகுதியில் பகுதியில் காவிரி ஆற்று கரையோரம் வீசி சென்று இருந்தனர்.

ராமஜெயம் கொலை வழக்கு; 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை | Ramajayam Murder Case A Reality Check On 12 People

இச்சம்பவம் திருச்சி மாவட்டத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொலை வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இவ்வழக்கை விசாரிக்க 12 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இவ்வழக்கு தொடர்பாக எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

உண்மை கண்டறியும் சோதனை 

பின்னர் மேலும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், சிபிஐ போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிறப்பு புலனாய்வு பல மாதங்களாக நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட மாடல் காரில் ராமஜெயத்தை கடத்தி சென்றது.

அதே மாடல் கார்களை பயன்படுத்திய உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கில் சந்தேகிக்கப்படும் 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் திட்டமிட்டனர்.

இதையடுத்து 12 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜரான அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையானது நடத்தப்பட உள்ளது.