தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன் மனைவி சரஸ்வதி அம்மாள் மற்றும் குடும்பத்தினருடனும் மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் அமைத்துள்ள 104 வது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியிருப்பதாவது - நான் 7வது முறையாக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்திருக்கிறேன்.
நல்லாட்சி தொடர வேண்டும் நானும் அதை நினைக்கிறேன். மக்களும் அதை நினைக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக நிம்மதியான ஆட்சி நடைபெற்றது. மக்கள் நிம்மதியாக, பெண்கள் சுதந்திரமாக இருந்தார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. கருத்துக் கணிப்புக்கு மக்கள் முக்கியத்துவம் தராது.
விமர்சனம் கொள்கை அடிப்படையில் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விமர்சனம் செய்யலாம் அது கூட நயமாகவும் நளினமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது.

ஓ.பி. ராமசாமி ரெட்டியார், காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை வரையில் விமர்சனங்களை நாகரீகமாக பேசினார்கள். இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது. அரசியல் கட்சிகள் விமர்சனங்களை தரமாக செய்யும்படி வகுத்துக்கொள்ள வேண்டும்.
தனிநபர் மற்றும் குடும்பத்தினர்கள்,பெண்கள், தாய்மார்கள், தாயை இழிவு படுத்தி பேசுவது இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று திருவள்ளுவர் வார்த்தைக்கு ஒப்பாகும் என கூறினார்.