விதியே என் செய போகிறாய்- விரக்தியில் பாமக நிறுவனர் ராமதாஸ்!

tamil cast doctor
By Jon Feb 05, 2021 06:38 AM GMT
Report

விதியே விதியே என்செய நினைத்தாய் வன்னிய சாதியை எனக்குரை யாயோ? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்டரில் பதிவிட்டிருக்கிறார். வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமக 6 கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இந்த நிலையில் போராட்டங்களுக்கு இடையே அதிமுக அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

இதில் எந்த உடன்பாடும் எடுக்கபடவில்லை என தகவல் வெளியானது. பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அதிமுகவும் பாமகவும் அறிவிக்காமல் இருந்த நிலையில், இன்றைக்கு பாமக நிறுவர் ராமதாஸ் இந்த ட்வீட்டினை பதிவிட்டிருக்கிறார்.

பேச்சுவாத்தையில் சுமுகம் ஏற்பட்டு நேற்று ராமதாஸ் முதல்வரை சந்திக்கிறார் என்று தகவல் வந்தது. ஆனால் இந்த சந்திப்பு நிகழத காரணத்தால் இந்த ட்வீட்டினை ராமதாஸ் வெளியிட்டு இருக்கிறார்.