அம்பலமான 2வது திருமணம் - அதிர்ச்சியில் பாமக தொண்டர்கள்!
ராமதாஸ் தனது 2வது மனைவியுடன் திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ராமதாஸ்
கடந்த ஜூன் 24ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் 60வது திருமண நாளை கொண்டாடிய போட்டோ வெளியானது.
இந்நிலையில் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் 50வது திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2வது மனைவி
திண்டிவனத்தில் ராமதாஸ் சிறிய கிளினிக் வைத்திருந்தபோது சுசிலா செவிலியராக சேர்ந்துள்ளார். சுசிலாவுக்கு 16 வயதாக இருக்கும்போதே ராமதாஸ் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் மாமல்லபுரத்தில் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கால்டன் சமுத்திரா ஹோட்டலில் இரண்டாவது மனைவியான சுசிலாவுடன் ஐம்பதாவது திருமண நாளை ராமதாஸ் கொண்டாடியுள்ளார்.
இதில் சுசீலாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.