தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஆளுநரே இல்லை - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

Dr. S. Ramadoss PMK R. N. Ravi Governor of Tamil Nadu
By Thahir Mar 13, 2023 10:07 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஆளுநரே இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் குறித்து விமர்சனம்  

பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர்.ராமதாஸ், கருணாநிதி மீது மிகப்பெரிய பற்று உள்ளது. நினைவிடம் உள்ள இடத்திலேயே கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடலில் சிலை அமைக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

ramadoss-review-of-the-governor

மேலும் தமிழக ஆளுநர் குறித்து பேசிய அவர், தமிழகத்திலுள்ள ஆளுநர்,ஆளுநரே இல்லை, தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு கையெழுத்திடாமல் உள்ளார் என விமர்சித்துள்ளார்.