காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ் - என்ன காரணம்?

Dr. S. Ramadoss Tamil nadu PMK
By Sumathi Sep 17, 2025 10:19 AM GMT
Report

ராமதாஸ் தனது காரில் இருந்து பாமக கொடியை அகற்றியுள்ளார்.

ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

ramadoss

இதனால், கட்சி நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் கடந்த வாரம் அறிவித்தார்.

பாமக எங்கள் வசம்தான்; எங்களை நீக்கமுடியாது - அதிர்ச்சியளித்த அன்புமணி!

பாமக எங்கள் வசம்தான்; எங்களை நீக்கமுடியாது - அதிர்ச்சியளித்த அன்புமணி!

கொடி அகற்றம் 

பின், அன்புமணியை நீக்க ராமதாஸ்க்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ் - என்ன காரணம்? | Ramadoss Removes Pmk Flag From Car Viral

இந்நிலையில், ராமதாஸ், அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர் சங்கத்தின் கொடியை மாற்றியுள்ளார்.

வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வன்னியர் சங்க கொடியை காரில் பொருத்தியுள்ளார்.