ஏதோ நாய் சொல்லி நீ கேட்கறியே உனக்கு அறிவில்லையா - ராமதாஸ் புதிய சர்ச்சை
election
controversy
Ramadoss
By Jon
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் உடன் ராமதாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சைக்குள்ளானது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 உள் ஒதுக்கீடு தொடர்பாக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வர தான் தான் காரணம் என வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்திருந்தார். ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி அதனை தட்டிப் பறிப்பதாகவும் குற்றம் சுமத்திருந்தார்.
இதை ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டதற்கு ராமதாஸ் சர்ச்சைக்குரிய விதத்தில் பதிலளித்துள்ளார்.