தொடருது கொடுமையிலும் கொடுமை: வேதனையில் ராமதாஸ்

kill fanticide usilampatti
By Jon Feb 27, 2021 08:13 AM GMT
Report

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியில் சின்னச்சாமி – சிவப்பிரியங்கா தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகளும் 3 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு 3ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால் குழந்தை பிறந்து சில மணி நேரத்திலேயே இறந்துவிட்டதாக உறவினர்களிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குழந்தையினை பெற்றோரே கொலை செய்திருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் சந்தேகித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் ச குழந்தை கொலை செய்யப்பட்டு உறுதியானது. பிரேத பரிசோதனை அறிக்கையில், செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் 7 நாள் பெண் குழந்தை உயிரிழந்த வழக்கில் பாட்டி நாகம்மாள் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்வீட்டர் பதிவில் தொடருது கொடுமையிலும் கொடுமைமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டியில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை சிசுக்கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. முடிவுக்கு வருமா இந்தக் கொடுமை?’’ என தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.