பாமக தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதம் - ராமதாஸ் பேச்சு
பாமகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதம் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் பாமக பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாமக சார்பில் போட்டியிடும் முரளி குமாருக்கு ஆதரவாக ராமதாஸ் அவர்கள் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, பா.ம.க. தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதம், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அமுதசுரபி. கல்விக்கான செலவு என்பது முதலீடு. மக்களுக்கு ரூ.4 லட்சம் வரை இலவச காப்பீடு, தமிழகத்தில் பள்ளிப் பிள்ளைகளுக்கு தரமான கட்டணமில்லாத கல்வி கொடுக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் படித்தாலும் அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும். சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க படாது. பெற்றோரின் பிறந்ததேதி கேட்பது உள்ளிட்ட ஆறு வினாக்கள் எழுப்பப்படாது. 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் சிறைவாசிகள் கருணை அடிப்படையில் சட்ட விதிகளை பின்பற்றி விடுவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.