ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க சொன்னதே நான் தான்- பாமக நிறுவனர் ராமதாஸ்
ஸ்டாலினுக்கு துணைமுதல்வர் பதவியினை கொடுக்க சொன்னதே நான் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், முதல்வர் எடப்பாடியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஒரு மேடையில், நான் தான் ஸ்டாலினின் தந்தை கருணாநிதியிடம் நீங்கள் இரவு பகலாய் அதிகமாய் செய்கிறீர்கள், ஆகவே ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள் என்று சொன்னேன் .
நான் சொல்லி 15 நாட்களில் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தார்கள் என தெரிவித்தார்.
மேலும் அதிமுக-வின் தேர்தல் அறிக்கை அமுத சுரப்பி என்றும், பாமக-வின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளார்.