தனக்கே அதிகாரம்.. ஒருபக்கம் அன்புமணி ராமதாஸ் - நான்தான் தலைவர்.. மறுபக்கம் ராமதாஸ் கடிதம்!
கட்சியின் தலைவர் ராமதாஸ்தான் என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உட்கட்சி மோதல்
பாமக நிறுவனரான ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு வெடித்திருந்தது. ராமதாஸின் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும்,
அடுத்த நாளே நீக்கப்பட்டவர்களை ராமதாஸ் மீண்டும் அதே பொறுப்பில் இணைப்பதும் தொடர்ந்து நடந்து வந்தது. இதன்பின் அன்புமணி கூட்டணி குறித்து தன்னை கட்டாயப்படுத்தியதாக ராமதாஸ் பொதுவெளியில் போட்டுடைத்தார்.
ராமதாஸ் கடிதம்
மேலும், இனி வரும் காலங்களில் கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், விருப்பமுள்ளவர்கள் இருக்கலாம், விருப்பம் இல்லாதவர்கள் கிளம்பலாம் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி நடந்த பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில், அன்புமணியை நிர்வாக குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.
தற்போது தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ராமதாஸ்தான் இனி தலைவராக தொடர்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த கடிதத்தை ஏற்க கூடாது என்றும், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தை அங்கீகரிக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி மின்னஞ்சல் மூலம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.