இறந்தவரின் உடலை ஒப்படைக்க 10 லட்சம் கேட்ட மருத்துவமனை - ராமதாஸ் எச்சரிக்கை!
புதுவையில் கூடுதல் பணம் கேட்டு இறந்தவரின் உடலை வழங்க தனியார் மருத்துவமனை மறுப்பு தெரிவித்தற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,''விழுப்புரம் மாவட்டம் சாலை அகரம் கிராமத்தை சேர்ந்த திலகவதி நாராயணசாமி என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார் .
இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதுவை கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள MVR மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
இந்த நிலையில் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் செலுத்தினால்தான் உடலை வழங்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி இருக்கிறது.
எச்சரிக்கை
இதனால் திலகவதியின் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் ஏற்கனவே ரூபாய் 4.2 லட்சம் செலுத்தி விட்ட நிலையில் கூடுதல் பணம் கேட்டு உடலை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
உயிரிழந்த நோயாளியின் உடலை பிணையாக வைத்துக்கொண்டு கூடுதல் கட்டணம் செலுத்தினால்தான் உறவினரிடம் ஒப்படைப்போம் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் மருத்துவ அறங்களுக்கும் எதிரானது.
உயிரிழந்த திலகவதியின் உடலை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்..'' என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.