பழனியில் கேரளா பெண் பாலியல் வன்கொடுமை: டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

Sexual abuse Palani Tn government Dr ramandoss Pmk
By Petchi Avudaiappan Jul 11, 2021 10:09 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 பழனி முருகன் கோவிலில் வழிபாட்டுக்கு வந்த கேரளாவை சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் புகாரை வாங்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண், தனது கணவருடன் கடந்த மாதம் 19 ஆம் தேதி பழனிக்கு சென்றார். வழியில் கணவர் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அப்ப என்னை கடத்தி சென்று கற்பழித்ததாகவும், இதுகுறித்து பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது அவர்கள் புகாரை எடுக்காமல் உதாசீனப்படுத்திய தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே இதுபற்றி தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள்.

பழனியில் கேரளா பெண் பாலியல் வன்கொடுமை: டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் | Ramadoss Condemn To Kerala Lady Sexual Abuse Case

இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.