தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வழக்கு
பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும்வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாமக கட்சியின் உரிமை தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கும். தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ்க்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதை எதிர்த்து ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், போலி ஆவணங்களை தாக்கம் செய்ததாக அன்புமணி மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, தேர்தல் ஆணையம் மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பாமக தலைவர் தான் மட்டுமே என்பதை பதிவு செய்யும் வரை தேர்தல் தேதி அறிவிக்ககூடாது என புதிய வழக்கொன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
