வன்னியர் இடஒதுக்கீடு அரசாணை: மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் நன்றி

MK stalin Anbumani ramadoss Vanniyar reservation Dr ramadoss
By Petchi Avudaiappan Jul 26, 2021 08:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அரசு வேலைகளிலும், கல்வி சேர்க்கையிலும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம், சீர்மரபினருக்கு 7 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

[

இதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.5% இட ஒதுக்கீட்டு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என கூறியுள்ளார்.