அதிமுக- பாமக கூட்டணி செல்லாது - ராமதாஸ் அதிரடி

Anbumani Ramadoss Dr. S. Ramadoss ADMK PMK Edappadi K. Palaniswami
By Sumathi Jan 07, 2026 03:10 PM GMT
Report

அதிமுக- பாமக கூட்டணி செல்லாது என ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அதிமுக- பாமக

அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக தலைவர் அன்புமணி நேரில் சந்தித்து, கூட்டணியை உறுதிப்படுத்தினர்.

ramadoss

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மருத்துவர் அய்யா மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.

17.12.2025 முதல் மருத்துவர் அய்யாவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 ராமதாஸ் மறுப்பு

பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது. மருத்துவர் அய்யா மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர்.

அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக - எத்தனை தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக - எத்தனை தொகுதிகள்?

இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம்.

கட்சி விதிப்படி மருத்துவர் அய்யா மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்” என தெரிவித்துள்ளார்.