'வன்னியர் இடஒதுக்கீடு நிரந்தரமானது.. நீக்க முடியாது' - ராமதாஸ் உறுதி
வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது, அதை நீக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இதற்கு தமிழகத்தில் உள்ள மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தற்காலிகமானதே என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, பாமக தலைவர் ராமதாஸ், முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, வன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீடு நிரந்தரமானது என முதல்வர் உறுதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
