தெருக்கூத்து பாத்து ரொம்ப நாள் ஆச்சு! சசிகலா வருகையை கலாய்க்கிறாரா ராமதாஸ்?

admk road flag
By Jon Feb 11, 2021 12:05 PM GMT
Report

பெங்களூரிலிருந்து சசிகலா சென்னை வந்தடைந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டபின் நேற்று பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார். சென்னை வரும் வழியில் அவருக்கு ஏராளமான அமமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

பெங்களூரில் தொடங்கிய பயணம் 23 மணி நேரம் தொடர்ந்த நிலையில் இடையிடையே கார்கள் மாறியும் சசிக்கலா பயணித்து சென்னை வந்தடைந்தார். சசிகலா வருகை அதிமுகவில், தமிழக அரசியல் களத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் 'தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு' என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது' என்று கூறியுள்ளார்.

சசிகலாவின் சென்னை வருகையை தான் ராமதாஸ் மறைமுகமாக சாடுகிறாரா எனப் பலரும் அனுமானித்து வருகின்றனர்.