இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சியே இருக்காது - ராமதாஸ் பேச்சு
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சி இருக்காது பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இளவழகன் என்பவரை ஆதரித்து இன்று மாலை ஆற்காடு அருகே கலவை என்ற இடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போ அப்போது பேசிய ராமதாஸ், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சி இருக்காது.
வேலூர் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாக இருப்பதால் அதை பிரிக்க வேண்டுமென தாம் வைத்த கோரிக்கை எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார் . பாமக எடுத்துரைத்த கோரிக்கைகளை எல்லாம் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி என்றும் பாமக தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம் எனவும் ராமதாஸ் கூறினார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ள வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை குடும்பத்தலைவி ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாஷிங் மிஷின், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் வறுமை ஒழிக்கப்படும். ஆனால் திமுக தேர்தல் அறிக்கை எதையும் நிறைவேற்ற முடியாது. இந்த தேர்தலுக்கு பிறகு திமுக அத்தியாயம் முடிந்துவிடும்.
அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் அதில் எந்த மாற்றமும் இல்லை ,அப்போது மருத்துவம் மற்றும் கல்வி இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் குடிசை வீடுகளுக்கு மாற்றாக காங்கிரீட் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மழைக்காலங்களில் பாலாற்றில் வீணாகும் தண்ணீரை தடுக்க பாலாற்றில் 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆற்காடு பகுதியில் புறவழிச் சாலை அமைக்கப்படும்.
ஆற்காடு நகரில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும் என தெரிவித்த ராமதாஸ்,
முதலமைச்சரும் தானும் விவசாயி என்பதால் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம்.
ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை எல்லாம் நிறைவேற்றுவோம் என ராமதாஸ் கூறினார்.