வரும் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் - தலைமை காஜி தகவல்
ramadan-
ghazi
By Irumporai
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் நோன்பு 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் .
இதில் கடுமையான விரதம், கூடுதல் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.
இறுதியில் ஏழைகளின் வரியாக ஜக்காத் என்னும் கடைமையை நிறைவேற்றி ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நோன்பு இருக்கும் நிகழ்வை ரமலான் மாதத்தின் 30 நாட்களும் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் ரமலான் பண்டிகையும் கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.