தமிழகத்தில் செவ்வாய்கிழமை ரம்ஜான் பண்டிகை - தலைமை ஹாஜி அறிவிப்பு
தமிழகத்தில் மே.3ஆம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.
30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, 30-வது நாளான இன்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஷிவ்வால் பிறை தென்படாததால் மே.3ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.
சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று முன்தினம் பிறை பார்க்கப்பட்டது. அப்போது பிறை தென்படாத நிலையில், நாளை அங்கு ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
மே 3-ம்தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பால் தமிழக முஸ்லிம்கள் தங்களது 30 நாட்கள் நோன்பை பூர்த்தி செய்ய உள்ளனர்.