கோபாலபுர அடிமையாக இல்லாத எல்.முருகன் Unfit தான்..! திமுகவை விளாசிய பாஜக..!
மக்களவையில் திமுகவின் டி.ஆர்.பாலு மற்றும் பாஜகவின் எல்.முருகன் மத்தியில் நடைபெற்ற நிகழ்வு பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
பாஜக குற்றச்சாட்டு
இது குறித்து தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம ஶ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "Unfit" நாங்களா? நீங்களா??மாண்புமிகு மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்களை டி.ஆர்.பாலு மிகவும் கொச்சையாக பேசி அவமானப்படுத்த முயற்சித்திருக்கிறார்!!!
Unfit' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்!
உண்மையில் நாம் இதற்கு கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை... எல்.முருகனே கூட Unfit அமைச்சர்தான்...! கோபாலபுரத்து சீமான்களின் வாரிசாக வந்தவர் இல்லை முருகன் எனவே அவர் Unfit தான்...!
இத்தனை ஆண்டுகள் பட்டியல் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தும் மத்தியில் அமைச்சராக இருந்தும் முறையற்ற வழியில் கோடி கோடியாய் பணம் சேர்க்கவில்லை எனவே Unfit தான்...! சினிமாவில் நடித்து புகழ் சேர்க்கவில்லை எனவே Unfit தான்...!
செருப்பு தைப்பவரின்
என்னை புதைத்த இடத்தில் கோபாலபுரத்து அடிமை அங்கே சமாதியில் இருக்கிறான் என்று சொல்லுங்கள் என்று மூத்த திமுக தலைவர்களே சொல்வது போல கொத்தடிமை சாசனம் எழுதவில்லை அவர்... எனவே அவர் Unfit தான்...!
திருட்டு ரயில் ஏறி அரசியலுக்கு வந்தவர் அல்ல அவர்...எனவே Unfit தான்...! ஒன்று இரண்டு மூன்று என்று வாழ்க்கைத் துணை நலன்களை வரிசைப்படுத்திக் கொண்டவர் அல்ல அவர்...எனவே அவர் Unfit தான்...!
ஒரு செருப்பு தைப்பவரின் மகன் அமெரிக்காவின் அதிபராக ஆப்ரஹாம் லிங்கனாக வந்தான் என்பதை உலக ஜனநாயகமே கொண்டாடுகிறது!!! அதே வழியில் ஒரு செருப்பு தைப்பவரின் பேரன் உலகத்தின் மிகப் பெரும் ஜனநாயகத்தில் மத்திய அமைச்சராக இருக்கிறார் என்பதையும் அப்படிச் செய்த நரேந்திர மோடி என்பதையும் இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை!!!
இவர்களின் ஜனநாயகப் பண்பே இவ்வளவுதான்...! ஏன் இவ்வளவு கோபம் அமைச்சரே?!!! முரசொலி அறக்கட்டளைக்கு பஞ்சமி விவகாரத்தில் முருகன் அவர்கள் சம்மன் அனுப்பினாரே என்ற கோபமா....?! வேல் யாத்திரை நடத்தி உங்களது இந்து விரோத போக்கை தோலுரித்தாரே என்ற கோபமா...?!
சாமானிய ஒருவன் கோபாலபுரத்து சீமான்களுக்கு சமமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறானே என்று கோபமா...?! 'Fitness Challenge' க்கு நாங்கள் தயார் அமைச்சரே நீங்கள் தயாரா???
"Unfit" நாங்களா? நீங்களா??
— Raama Sreenivasan (@ProfessorBJP) February 7, 2024
இராம ஶ்ரீநிவாசன்
தமிழ் மாநில பொதுச் செயலாளர் - பாஜக
மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களை டி.ஆர்.பாலு மிகவும் கொச்சையாக பேசி அவமானப்படுத்த முயற்சித்திருக்கிறார்!!!
'Unfit' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்!
உண்மையில் நாம் இதற்கு… pic.twitter.com/O0Nv6DQSC8
அடுத்த நாடாளுமன்றத்திலும் எல்.முருகன் அவர்கள் அமைச்சராக தொடர்வார்...
அடுத்த நாடாளுமன்றத்தில் உங்களுக்கு அமர இடம் இருக்குமா அந்த 'Fitness' உங்களுக்கு இருக்குமா அமைச்சரே?? என பதிவிட்டுள்ளார்.