வாழ்வா...? சாவா...? ஒருவரால் ஏமாந்து நடுத்தெருவுக்கு வந்த பிரபல நடிகையின் கண்ணீர் பேட்டி...! - ரசிகர்கள் சோகம்...

Rajinikanth
By Nandhini Dec 12, 2022 01:35 PM GMT
Report

தான் ஒருவரை நம்பி ஏமாந்து அனைத்தையும் இழந்தபோது ரஜினி தான் உதவி செய்தார் என பழம்பெரும் நடிகை ரமா பிரபா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை ரமா பிரபா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரபல நடிகை ரமா பிரபா. இவர் சர்வர் சுந்தரம், பட்டனத்தில் பூதம், சாந்தி நிலையம், வியட்நாம் வீடு, வசந்த மாளிகை, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

rama-prabha-rajinikanth

நடிகை ரமா பிரபா கண்ணீர் பேட்டி

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து ரமா பிரபா மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில்,

என் வாழ்க்கையில் எவ்வளவோ அவமானங்கள், கஷ்டங்களை கடந்து தான் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரானார். எவ்வளவு பெரிய அந்தஸ்துக்கு போனாலும், அவர் எளிமை, அடக்கமாக உள்ளார்.

அவர் யார் கஷ்டப்பட்டாலும் உடனே உதவி செய்து விடுவார். அப்படி நடிகர் ரஜினிகாந்திடம் உதவி கேட்டு சென்றவர்களில் நானும் ஒருத்தி. நான் நிறைய சம்பாதித்தேன்.

ஆனால், ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டேன். நான் சேமித்து வைத்த சொத்துக்கள் எல்லாம் இழந்து விட்டேன். கட்டிய துணியோடு நடுத்தெருவில் நின்றேன்.

வாழ்வா..? சாவா என்று தவித்த நான், ரஜினியிடம் உதவி கேட்கலாம் என்று அவர் வீட்டிற்கு சென்றேன். அவரை வீட்டில் சந்தித்தேன். என் கஷ்டத்தையெல்லாம் பொறுமையாக கேட்டபிறகு, எனக்காக அவர் வருத்தப்பட்டார்.

உடனே அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தையும் என்னிடம் கொடுத்தார். அந்த காலத்தில் ரூ. 40 ஆயிரம் என்பது மிகப் பெரிய பணம். நான் கஷ்டம் என்று சொன்னதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர் செய்த உதவியால் என் பல கஷ்டங்கள் தீர்த்தது. நான் எப்போதும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று கண்கலங்கி தழுதழுத்த குரலில் பேசினார்.