குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

president chennai ram nath kovind
By Jon Mar 09, 2021 07:24 PM GMT
Report

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக சென்னை வருகிறார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் பயணம் செய்து வந்தார். விமான நிலையத்தில் குடியரசு தலைவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர் அங்கிருந்து காரில் கவர்னர் மாளிகைக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மற்றும் நாளை மறுநாள் திருவள்ளுவர், அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார் தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 11 ஆம் தேதி பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் ராம்நாத் கோவிந்த் டெல்லி செல்ல இருக்கிறார்.

குடியரசு தலைவர் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 11 ஆம் தேதி மாலை வரை தொடரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.