ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மருத்துவமனையில் அனுமதி

president india army ram nath
By Jon Mar 27, 2021 12:23 PM GMT
Report

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை லேசான நெஞ்சுவலி காரணமாக பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குடியரசுத் தலைவர் நலமாக உள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ராம்நாத் உடல்நிலைக் குறித்து அவரது மகனிடம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி விசாரித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Gallery