ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இருதய அறுவை சிகிச்சை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வருகிற 30ம் தேதி இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு மேலு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று மதியம் கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து ஜனாதிபதியின் அலுவலகம் அளித்த தகவலானது, நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராணுவ மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து, மார்ச் 30ம் தேதி காலை அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.