நாடாளுமன்றத்தில் பிரியாவிடை நிகழ்ச்சி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சி உரை

Ram Nath Kovind
By Nandhini Jul 23, 2022 01:12 PM GMT
Report

இரவு விருந்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, அவருக்கு இரவு விருந்தை பிரதமர் மோடி அளித்தார். இந்த இரவு விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்துடன் கலந்து கொண்டார்.

இவ்விருந்தில், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள், பத்ம விருது பெற்றவர்கள் உள்பட பலர் பிரமுகர்களும் இவ்விருந்தில் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பிரியாவிடை நிகழ்ச்சி

இந்நிலையில், இந்திய நாட்டின் 14வது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.க்கள் பிரியாவிடை கொடுத்தனர். 

இந்நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்திய ஜனாதிபதியாக இங்கே சென்ட்ரல் ஹாலில் பதவியேற்றேன். அனைத்து எம்பிக்களுக்கும் எனது இதயத்தில் தனி இடம் உண்டு. அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த பாடுபட வேண்டும்.  எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றார். 

Ram Nath Kovind