ஒரு புறம் தடபுடல் ஏற்பாடு - மறுபுறம் டென்ஷன் - கோவில் கோவிலாக சுற்றும் ரகுல் ப்ரீத் சிங்

Rakul Preet Singh Actress
By Karthick Feb 17, 2024 04:03 PM GMT
Report

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் ஜாக்கியை வரும் 21-ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளிவருகின்றன.

ரகுல் ப்ரீத் சிங்

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகின்றவர் ரகுல் ப்ரீத் சிங். அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் "அயலான்" படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.

rakul-preet-singh-visiting-temples-with-lover

தற்போது 31 வயதாகும் அவர், கடந்த சில ஆண்டுகளாகவே ஹிந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி என்பவருடன் காதலில் இருந்து வந்துள்ளார்.

தேதி குறிச்சாச்சு - திரிஷா பட நாயகனை திருமண செய்யும் ரகுல் ப்ரீத் சிங்...!

தேதி குறிச்சாச்சு - திரிஷா பட நாயகனை திருமண செய்யும் ரகுல் ப்ரீத் சிங்...!

இதனை அவர்களே சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்திய நிலையில், கடந்த மாதம் முதல் இவர்களுக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

rakul-preet-singh-visiting-temples-with-lover

இந்நிலையில் தான், தனது வருங்கால கணவருடன் அவர் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்த படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயக கோயிலுக்கு சென்றனர்.