கணவருக்கு அப்பா வைத்த முதல் டெஸ்ட்; பதறிய ரகுல் ப்ரீத் சிங் - என்னாச்சு தெரியுமா?
நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவர் குறித்த சில சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்
தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் ரகுலின் சமீபத்திய பேட்டி ஒன்றில், உண்மையில் அன்று நான் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். என்னுடைய தந்தையை ஜாக்கி உடனான அந்த சந்திப்பிற்கு தயார்படுத்தி, அவர் முதன்முறையாக உங்களை சந்திக்க வருகிறார்.
இந்த சந்திப்பை அசெளரியமாக மாற்றி விடாதீர்கள். ஜாக்கி ராணுவத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆகையால் நீங்கள் பையனை பார்த்தால் மட்டும் போதும் என்று கூறியிருந்தேன். ஜாக்கியிடமும் நீ எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம். அப்பா எதையும் உன்னிடம் கேட்கமாட்டார் என்று சொல்லியிருந்தேன்.
அப்பா வைத்த டெஸ்ட்
நாங்கள் மதிய உணவை ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது என்னுடைய அப்பா ஜாக்கியிடம்அடுத்ததாக உங்களது திட்டம் என்ன என்று கேட்டார். தன்னுடைய அடுத்தப்பட வெளியீடு குறித்தான வேலைகள் குறித்து பேசினார். அதற்கு என்னுடைய அப்பா, வேலை உள்ளிட்டவையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.
ரகுலை பொறுத்தவரை உன்னுடைய திட்டம் என்ன என்று கேட்டார்.
இதைப்பார்த்த எனக்கு, சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவு என்னுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது. ஆனால் அதற்கு ஜாக்கி கொடுத்த பதிலானது என்னுடைய அப்பாவை அவரின் ரசிகராக மாற்றிவிட்டது. ரகுல் எப்போது ரெடியாக இருக்கிறாளோ… அப்போது நானும் ரெடியாக இருப்பேன்’ என்றார் என சில சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.