தேதி குறிச்சாச்சு - திரிஷா பட நாயகனை திருமண செய்யும் ரகுல் ப்ரீத் சிங்...!

Rakul Preet Singh Trisha Marriage
By Karthick Jan 01, 2024 02:53 PM GMT
Report

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக படங்கள் நடித்து முன்னணி நாயகியாக தற்போது வளம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

rakul-preet-singh-getting-married-in-february

தற்போது இவர் நடிப்பில் தமிழில் "அயலான்" படம் வரும் பொங்கல் வெளியீட தயாராகி இருக்கும் சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.

திருமணம்

தற்போது 33 வயதாகும் ரகுல் பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டில் தாங்கள் காதலிப்பதை இந்த ஜோடி உறுதிப்படுத்திய நிலையில், தொடர்ந்து பல நாடுகளுக்கு இவர்கள் ஒன்றாக சுற்றி வருகின்றனர்.

rakul-preet-singh-getting-married-in-february

அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

rakul-preet-singh-getting-married-in-february

ஆனால், இது குறித்தான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஜாக்கி பக்னானி தமிழில் திரிஷாவின் மோகினி படத்தில் நடித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட இவருக்கு வயது 39 ஆகும்.