போதை பொருள் வழக்கில் கைதான ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் - தெலுங்கானாவில் அதிர்ச்சி
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரகுல் ப்ரீத் சிங்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் பிஸியாக நடிக்கும் நடிகையாக இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இவருக்கு 3 மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
அண்மையில் இவரின் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளிவந்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் பாலிவுட் தயாரிப்பாளர் - நடிகர் ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய பணமோசடி விவகாரத்தில் ரகுலுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியது. அச்செய்தியை பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று போதை பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் கைதாகியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
கைது
தெலுங்கானாவின் சைபராபாத் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் ராஜேந்திர நகர் SOT (Special Operation Team) போலீஸாரின் கூட்டு நடவடிக்கைக்குப் பிறகு போதைப்பொருள் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக 5 பேர் போதை பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக கைதாகியிருக்கும் சூழலில். அவற்றை எடுத்து கொண்ட 13 பேரின் பட்டியலில் தான் அமானின் பெயர் வந்தது என்றும் அவர்களுக்கு
நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளதாக கூறி, விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் உறுதி செய்தனர்.