காரிலேயே உடை மாற்றுவேன் - ரகுல் ப்ரீத் சிங் வேதனை!

Rakul Preet Singh Indian Actress
By Sumathi Jan 23, 2023 07:30 PM GMT
Report

திரையுலகில் தனது அனுபவங்களை நடிகை ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ளார்.

 ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் தான் கடந்து வந்த விஷயங்களைப் பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

காரிலேயே உடை மாற்றுவேன் - ரகுல் ப்ரீத் சிங் வேதனை! | Rakul Preet Singh About Struggles In Film Industry

அதில், “சினிமாவில் எனக்கு எந்த பின்னணியும் இல்லை. மும்பையிலுள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்து எந்தெந்த ஆபீஸுக்கு செல்ல வேண்டும், எங்கு நடிகை தேர்வு நடக்கிறது என்பது குறித்து தெரிந்துக் கொள்வேன்.

வேதனை

பையில் சில உடைகளை வைத்துக் கொண்டு காரிலேயே மாற்றிக் கொள்வேன். சில வாய்ப்புகள் வருவது போல் இருந்து திடீரென வேறொரு நடிகைக்கு மாறி விடும். சில படங்களில் என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு, பிறகு மாற்றினார்கள்.

காரிலேயே உடை மாற்றுவேன் - ரகுல் ப்ரீத் சிங் வேதனை! | Rakul Preet Singh About Struggles In Film Industry

இதையெல்லாம் போராட்டம் என நினைக்க மாட்டேன். ஏனென்றால் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது” எனத் தெரிவித்துள்ளார்.