கல்யாணம் நின்னுட்டா என்ன? இன்னும் தொடர்பில்தான் இருக்கேன் - ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் உருக்கம்

Rashmika Mandanna Bollywood
By Sumathi Feb 13, 2024 02:30 PM GMT
Report

ராஷ்மிகா குறித்து அவரது முன்னாள் காதலர் உருக்கமான தகவலை பகிர்ந்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா

கன்னட திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கல்யாணம் நின்னுட்டா என்ன? இன்னும் தொடர்பில்தான் இருக்கேன் - ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் உருக்கம் | Rakshit Shetty About Ex Lover Rashmika

அதன்பின், புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து, சமீபத்தில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அந்தப் படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.

விஜய் தேவரகொண்டாவை பிரிந்த ராஷ்மிகா - வேறு நடிகருடன் டேட்டிங்!

விஜய் தேவரகொண்டாவை பிரிந்த ராஷ்மிகா - வேறு நடிகருடன் டேட்டிங்!

முன்னாள் காதலர் உருக்கம்

இதற்கிடையில், ராஷ்மிகா தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாகவும், இரண்டு பேரும் வெளிநாட்டுக்கு அடிக்கடி பறப்பதாகவும், ஒரே வீட்டில் இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. முன்னதாக, ராஷ்மிகா நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்தார்.

rashmika mandanna - rakshit-shetty

அவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. திருமணம் செய்துகொண்டால் சினிமாவில் வளர முடியாது என ராஷ்மிகா முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரக்‌ஷித் ஷெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில்,

"ராஷ்மிகா மந்தனாவுடனான எனது திருமணம் நின்றுவிட்டதுதான். இருந்தாலும் அவருடன் நான் இப்போதும் தொடர்பில்தான் இருக்கிறேன். அவருக்கு மிகப்பெரிய கனவு இருந்தது. அதனை அவர் அடைந்துவிட்டார். அவருக்கான அங்கீகாரத்தை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.