ராக்கி சாவந்தின் கணவன் கைது...! - தன்னை அடிக்க வந்ததாக போலீசில் பரபரப்பு புகார்...!

Bollywood
By Nandhini 1 மாதம் முன்
Report

நடிகை ராக்கி சாவந்தின் கணவர் அடில் துரானி, நடிகை அளித்த திருமண வன்கொடுமை புகாரின் பேரில் போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ராக்கி சாவந்த் திருமணம்

பிரபல கவர்ச்சி நடிகையாக பாலிவுட்டில் வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவரும், ஆதில் என்பவரும் கடந்த 2022ம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் அவர்களின் திருமணம் ஊடகங்களால் அறிவிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ராக்கி சாவந்த்தின் தாயார் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து, தன் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ராக்கி சாவந்த்.

rakhi-sawants-hubby-arrested

ராக்கி சாவந்தின் கணவன் கைது

இந்நிலையில், கணவர் ஆதில் மீது ராக்கி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், தன்னை அடிப்பதற்காக அடில் தன் வீட்டிற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். 2 முறை ராக்கி ஆதில் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து ராக்கி பேசுகையில்,

என்னிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை அவரது கணவர் ஆதில் எடுத்துள்ளார். ஆதிலுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இப்போது, ​​நான் அடிலுடன் எந்த வித சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை. பல பெண்களுடன் உறங்கும் ஒரு மனிதனுடன் என்னால் வாழ முடியாது. ராக்கி ஆடிலிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறேன் என்றார்.

தற்போது ராக்கி சாவந்த்தின் கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.