3வது திருமணம் செய்யும் பிரபல நடிகை - மாப்பிளையாகும் பாகிஸ்தான் நடிகர்
நடிகைராக்கி சாவந்த் பாகிஸ்தான் நடிகரை 3வது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
ராக்கி சாவந்த்
ஹிந்தி படங்களில் நடித்து வரும் ராக்கி சாவந்த்(Rakhi Sawant), பிக்பாஸ் தொடரில் பங்கு பெற்றதன் மூலம் பிரபலமானார். தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்துள்ள இவர், சில தமிழ் படங்களில் பாடல்களில் தலை காட்டியுள்ளார்.
ராக்கி சாவந்த் முன்னதாக பிக்பாஸ் தொடரில் தன்னுடன் கலந்து கொண்ட ரிதேஷ் சிங்(ritesh singh) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சில காலத்தில் விவகாரத்தில் முடிந்தது.
3வது திருமணம்
இதன் பிறகு டெல்லியைச் சேர்ந்த அடில் கான்(adil khan) என்ற நபரை ராக்கி சாவந்த் இரண்டாம் திருமணம் செய்தார். ராக்கி சாவந்த் தன்னை பணத்திற்காக திருமணம் செய்ததாகவும், அடில் கான் தன்னை புகழுக்காக திருமணம் செய்ததாகவும் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்தனர். தற்போது ராக்கி சாவந்த் பாகிஸ்தானை சேர்ந்த நடிகரும், தொழிலதிபருமான தோதி கான்(dodi khan) என்பவரை 3வது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இது குறித்து பேசியராக்கி சாவந்த், "என்னை திருமணம் செய்து கொள்ள பலர் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். என் முந்தைய திருமணங்களில் நான் கொடுமைபடுத்தப்பட்டது பாகிஸ்தான் மக்களுக்கு புரிந்திருக்கிறது. நான் பாகிஸ்தான் சென்றபோது அதை தெரிந்து கொண்டேன். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலரும் திருமணம் செய்துள்ளனர்.
எனக்கு பாகிஸ்தான் மக்களை மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு அங்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். எங்களின் திருமணம் இஸ்லாமிய முறைப்படி பாகிஸ்தானில் நடக்கும். இந்தியாவில் வரவேற்பு நடைபெறும். ஸ்விட்சர்லாந்து அல்லது நெதர்லாந்தில் தேனிலவை கொண்டாட இருக்கிறேன். துபாயில் செட்டிலாக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.