‘அவன் எனக்கு மட்டும் தான்’ - காதலனுக்காக மற்றொரு பெண்ணுடன் அடித்துக்கொள்ளும் பிரபல நடிகை
பாலிவுட்டின் பிரபல நடிகையான ராக்கி ஷாவந்த் அண்மையில் தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தன்னை விட ஆறு வயது இளையவரான ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்த ராக்கி வீடியோ கால் மூலம் தன் புதிய காதலரை செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில் ராக்கி ஷாவந்துக்கு மைசூரை சேர்ந்த ரோஷினா தல்வாரி என்ற பெண் போன் செய்து தானும், ஆதில் கானும் 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறியிருக்கிறார்.
மேலும் தன் காதலரிடம் இருந்து தள்ளி இருக்குமாறும் ராக்கி ஷாவந்தை எச்சரித்திருக்கிறார் ரோஷினா. அதேபோல், அவரும், ஆதிலும் நேரம் செலவிட்டது குறித்து விரிவாக ரோஷினா ராக்கியிடம் தெரிவிதிருக்கிறார்.
இதனை தொடர்ந்து ஆதிலை அழைத்து ராக்கி ஷாவந்த் இது குறித்து கேட்கையில் ஆதில், ரோஷினா தன் முன்னாள் காதலி என்று பதில் அளித்திருக்கிறார்.
ரோஷினா பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராக்கி, ரோஷினா தனக்கு போன் செய்ததால் எதுவும் மாறப் போவது இல்லை. ஆதில் எனக்கு மட்டும் தான். ரோஷினா அவரின் முன்னாள் காதலி.
ஆதிலும், நானும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று தெரிவித்தார். மற்றொரு பேட்டியில் ஆதிலின் குடும்பம் தான் கவர்ச்சியான நபர் என்பதால் தன்னை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தான் அணியும் ஆடை அந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.