கொரோனா தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய கவர்ச்சி நடிகை

COVID-19 Vaccine
By Irumporai Jul 20, 2022 07:33 PM GMT
Report

பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை 2019-ல் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

சர்ச்சையினை கிளப்பிய நடிகை

திருமணமான தகவலை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார். ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரிதேஷை ராக்கி சாவந்த் பிரிந்தார். தற்போது ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து வருகிறார்.

கொரோனா  தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய கவர்ச்சி நடிகை | Rakhi Sawant Compare Covid Booster Shot To Viagra

அடிக்கடி எதையாவது கூறி சர்ச்சையில் சிக்கி கொள்வது அவரது வழக்கம். கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். மும்பை விமான நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து ராக்கி சாவந்த் பேசினார்.

பூஸ்டர் தடுப்பூசி வயகரா

பூஸ்டர் தடுப்பூசி எடுத்து கொண்டதாகவும் ஆனால் இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை.என்றும். என் இதயத்துடிப்பு மிகவும் வேகமாக உள்ளது.

நான் சோர்வடைந்து இருக்கிறேன். என் முகம் வீங்கி விட்டது. அரை மணி நேரம் கூட தூங்க முடியாமல் சிரமப்படுகிறேன். நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன்.

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இளம் வயதினருக்கு ஏற்றதல்ல என்பதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் இந்த பூஸ்டர் டோஸ் ஷிலாஜித் அல்லது வயாகராவை ஒத்திருக்கிறது என அவர் கூறினார்