என்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தார் - ராக்கி சாவந்தின் கணவர் மீது ஈரானிய மாணவி புகார்...!

Cinema Lead Bollywood
By Nandhini Feb 14, 2023 07:42 AM GMT
Report

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ராக்கி சாவந்தின் கணவர் ஆதில் துரானி மீது ஈரானிய மாணவி ஒருவர் மைசூருவில் உள்ள காவல்நிலையத்தில் நேற்று பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

ஆதில் துரானி மீது ஈரானிய மாணவி புகார்

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ராக்கி சாவந்தின் கணவர் ஆதில் துரானி மீது ஈரானிய மாணவி ஒருவர் மைசூருவில் உள்ள காவல்நிலையத்தில் நேற்று பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில்,

கடந்த 5 ஆண்டுகளாக டாக்டர் ஆஃப் பார்மசி படிப்பதற்காக இந்தியாவில் தங்கியிருந்தபோது, ​​ஆதில் துரானியுடன் நெருங்கிப் பழகினேன். ஆதில் துரானி என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார்.

என் நம்பிக்கையைப் பெற்று என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். திருமணம் செய்து கொள்வதாக நம்பி, வி.வி.புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அவருடன் உடல் ரீதியான தொடர்பை வளர்த்துக்கொண்டேன். ஆனால், என்னை திருமணம் செய்ய ஆதில் துரானி மறுத்துவிட்டார்.

இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது, எங்களுடைய நெருக்குமான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டினார். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஈரானிய மாணவி கொடுத்த புகாரின் பேரில், தற்போது மைசூர் போலீசார் ஆதில் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராக்கி சாவந்த் புகார்

சமீபத்தில், ஆதில் துரானி தன் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், திருமண வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் மீது அவரது மனைவி ராக்கி சாவந்த் போலீசில் புகார் கொடுத்தார். இதயைடுத்து, ஆதில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.    

rakhi-sawant-adil-khan-durrani-arrest