என்னை நிர்வாணமாக படம் பிடித்து பணத்திற்காக விற்பனை செய்து விட்டார் - கணவர் மீது ராக்கி சாவந்த் பரபரப்பு புகார்..!
என்னை நிர்வாணமாக படம் பிடித்து பணத்திற்காக விற்பனை செய்து விட்டார் என் தன் இரண்டாவது கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
ராக்கி சாவந்த் திருமணம்
பிரபல கவர்ச்சி நடிகையாக பாலிவுட்டில் வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவரும், ஆதில் என்பவரும் கடந்த 2022ம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் அவர்களின் திருமணம் ஊடகங்களால் அறிவிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ராக்கி சாவந்த்தின் தாயார் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து, தன் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் சமீபத்தில் தெரிவித்திருந்தார் ராக்கி சாவந்த்.
ராக்கி சாவந்தின் கணவன் கைது
இதனையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு, கணவர் ஆதில் மீது ராக்கி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில், தன்னை அடிப்பதற்காக ஆதில் தன் வீட்டிற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, ராக்கி சாவந்த் அளித்த புகார்கள் தொடர்பாக போலீசார் ஆதில் துரானி மீது மோசடி, காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நிர்வாணமாக படம் பிடித்து விற்பனை செய்தார்
இதனையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி ஆதில் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இதற்கிடையில், நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராக்கி சாவந்த் பேசுகையில், ஆதிலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. இதனால்தான் என் தரப்பு நியாயத்தை கூற நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். ஆதில் என்னை சித்திரவதை செய்து ஏமாற்றிவிட்டார்.
என் ஓடிபியை திருடி, எனது பணத்தை திருடி விட்டார். என்னை நிர்வாணமாக படம் பிடித்து ஆதில் பணத்திற்காக விற்றுவிட்டார். என்னை நிர்வாண வீடியோ எடுத்து அதையும் விற்றுள்ளார் என்றார்.
தற்போது ராக்கி தன் கணவர் மீது வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு பாலிவுட் சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.