நீங்கள் போராட்டம் நடத்தவில்லையென்றால் உங்கள் நிலத்தை இழப்பீர்கள்: எச்சரிகை விடும் ராகேஷ் டிக்கைட்
நீங்கள் மட்டும் போராட்டம் நடத்திவில்லையென்றால் அடுத்த 20 ஆண்டுகளில் உங்கள் நிலத்தை இழப்பீர்கள் என்று கர்நாடக விவசாயிகளை விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் எச்சரித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் செய்கிறார்கள். புதிய வேளாண் சட்டம் திரும்ப பெரும் வரை ஒவ்வொரு நகரத்திலும் இது போன்ற போராட்டத்தை நடத்த வேண்டும்.
உங்கள் நிலத்தை பறிக்க ஒரு வியூகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் விவசாயம் செய்யும். மலிவான உழைப்பை பயன்படுத்த தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளதாக கூறிய ராகேஷ்.
பெங்களூரில் ஒரு டெல்லியை உருவாக்க வேண்டும் என கூறினார். நீங்கள் அவ்வாறு போராட்டத்தை நடத்தப்படாவிட்டால், நாடு விற்கப்படும். அடுத்த 20 ஆண்டுகளில் உங்கள் நிலத்தை இழப்பீர்கள் என ராகேஷ் டிக்கைட் எச்சரித்தார்.