உயரும் எரிவாயு விலையால் கடுப்பான எம்பிக்கள் : போராட்டக்களமான மக்களவை

rajyasabha petroldieselhike protestmp
By Irumporai Mar 22, 2022 07:47 AM GMT
Report

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2021 நவம்பர் 4ம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

அதாவது கிட்டதிட்ட 137 நாட்களுக்குப் பிறகு விலை அதிகரித்துள்ளது. அதாவது 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றம் சாமான்ய மக்களை வெகுவாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாமானிய மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

சமையல் எரிவாயு விலையை ரூ.50 உயர்த்தி இருப்பது சரியல்ல என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல்., மதிமுக, விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பினர். இதன் காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.